உள்நாட்டு செய்தி
மன்னாரில் கவனயீர்ப்புப் போராட்டம் !
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் 11 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று ம முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ”அரசாங்கம் சர்வதேச நாடுகளை ஏமாற்றியதைப் போன்று, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடுகின்ற தாய்மாரின் கண்ணீரையும், அவர்களின் துயரங்களையும் ஏமாற்றி வெற்றி பெற முடியாது” என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர்.