முக்கிய செய்தி
அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு…!
அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மாதாந்த நிறைவேற்று கொடுப்பனவை 10,000 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கு அமைவாக, 15,000 ரூபாவாக காணப்பட்ட கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் புதிய திருத்தம் நடைமுறைக்கு வரும் என குறிப்பிட்டு நேற்று சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.