முக்கிய செய்தி
2024 ஆம் ஆண்டுக்கான ‘ஜனாதிபதி சுற்றாடல் விருது’
காலநிலை மாற்றத்தினால் குறைந்த வருமானம் கொண்ட ஆபிரிக்க நாடுகளுக்கான கடனை முழுமையாக ரத்துச் செய்ய வேண்டும் என்பதே இலங்கையின் வெளியுறவுக் கொள்கையாகும். இருப்பினும், இலங்கைக்கு அவ்வாறானதொரு நிவாரணம் அவசியமில்லை என்பதோடு, உள்நாட்டுக் கடனை முகாமைத்துவம் செய்துக்கொண்டு முன்னோக்கி பயணிப்பதற்கான இயலுமையும் திறனும் இலங்கைக்கு உள்ளதாகவும் கொழும்பு BMICH இல் இன்று (28) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான ‘ஜனாதிபதி சுற்றாடல் விருது’ வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்,