Connect with us

உள்நாட்டு செய்தி

6000 இறந்த ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது..!

Published

on

 

 

6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறந்த ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளதாக
கம்பஹா மாவட்ட செயலக அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் கோபா குழுவிற்கு அழைக்கப்பட்ட போது, ​​இந்த விடயங்கள் தொடர்பான விபரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

துணை கணக்காய்வாளர் ஜெனரல் எம்.எஸ். நயன குமார இந்தத் தகவலை குழுவில் தெரிவித்துள்ளார்.

பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் ஓய்வூதிய திணைக்களத்தின் தவறான செயற்பாடுகளினால் இந்த முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், முப்படையினருக்கு அதிகளவான ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கோபா குழுவில் தெரியவந்துள்ளது.

இறந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைச் செலவுகளும் அதிகளவில் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்தக் குழுவில் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சுமார் 6,400 சட்டவிரோத ஓய்வூதியங்கள் பதிவாகியுள்ளதாகவும் கோபா குழு உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *