உள்நாட்டு செய்தி
விசர் நாய்க் கடிக்கு இலக்கான சிறுமி பலி..!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விசர் நாய்க் கடிக்கு இலக்கான நான்கு வயது சிறுமியொருவர் நேற்றைய தினம் (26) உயிரிழந்தார்.
கிளிநொச்சியைச் சேர்ந்த நான்கு வயதான சிறுமி விசர்நாய்க் கடிக்கு இலக்கான நிலையில்,
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.
சிறுமிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.