உள்நாட்டு செய்தி
(OCC) கடன் மறுசீரமைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கைசாத்திடல்ஆரம்பம்…..!
இலங்கை மற்றும் அதன் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவிற்கு இடையிலான (OCC) கடன் மறுசீரமைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கைசாத்திடல் , அதனை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று (26) பெரிஸ் நகரில் ஆரம்பமான பெரிஸ் கிளப்பிற்கு இணையாக, உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவின் மூன்று இணைத் தலைவர்களான பிரான்ஸ், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் இலங்கை பிரதிநிதிகளுடன் இந்த புரிதுந்துணர்வு ஒப்பந்தத்தை கைசாத்திடுவதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வில் கலந்துகொண்டனர். ஏனைய அனைத்து கடன் வழங்குநர்களும் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதன் பின்னர் இணக்கப்பாடுகளுக்கு அமைவாக கடன் மறுசீரமைப்பை முறையாக செயல்படுத்தப்படும்.-