உள்நாட்டு செய்தி
போலி நாணயத்தாள்களுடன் மாணவன் கைது..!
தம்புத்தேகம பஸ் நிலையத்தில் காத்திருந்த பாடசாலை மாணவர் ஒருவர் 6 போலியான 500 ரூபா நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
நொச்சியாகம உடுநுவர காலனியைச் சேர்ந்த (17) வயதுடைய மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று (25) பிற்பகல் தம்புத்தேகம பேருந்து நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான வகையில் தங்கியிருந்த வேளையில்,
பேருந்து நிலையத்தில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவரிடம் 6 போலி 500 ரூபா நாணயத்தாள்களை கண்டெடுத்துள்ளார்.
சந்தேகநபரின் தகவலின் அடிப்படையில் பொலிசார் அவரது வீட்டை சோதனையிட்ட போது வீட்டில் பணம் அச்சடிக்கக் கூடிய கருவிகளை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.