உள்நாட்டு செய்தி
பழ உற்பத்தியை அதிகரிக்க விவசாயத் திணைக்களம் நடவடிக்கை !
2027 ஆம் ஆண்டளவில் அதிகரிக்க விவசாயத் திணைக்களம் நடவடிக்கை வாழை உற்பத்தியை ஹெக்டேருக்கு 19.5 மெட்ரிக் தொன்னாகவும், மா உற்பத்தியை 9.5 மெட்ரிக் தொன்னாகவும் பப்பாளி உற்பத்தியை 45 மெட்ரிக் தொன்னாகவும் அன்னாசி உற்பத்தியை 14 மெட்ரிக் தொன்னாகவும், பாசிப்பழ உற்பத்தியை 30 மெட்ரிக் தொன்னாகவும்அதிகரிக்க திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
கலப்பின வகை இனப்பெருக்கம், அதிக அடர்த்தி கொண்ட பயிர்ச்செய்கை, ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாடு, தாவர ஊட்டச்சத்து அறிமுகம், பயிர் சேதத்தை குறைத்தல் மற்றும் பெறுமதி சேர்ப்பு உற்பத்தியை அறிமுகப்படுத்துதல் போன்ற பல தொழில்நுட்ப நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .மேலும் , 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் பழங்களின் நுகர்வு 12.8 மில்லியன் மெட்ரிக் தொன்களாக (1,283,039 மெட்ரிக் தொன்) அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, நாட்டில் விளைவிக்கக்கூடிய பழங்களை இறக்குமதி செய்வதற்கு செலவிடப்படும் அந்நியச் செலாவணியை சேமிப்பது தேசிய பொறுப்பு என அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.