உள்நாட்டு செய்தி
கடற்பரப்புகள் கொந்தளிப்புடன் காணப்படும் – வளிமண்டலவியல் திணைக்களம்!
இலங்கை கடற்பரப்புகள் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கொந்தளிப்புடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகளிலும் கடலலை மேலெழக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதிகளில் காற்று மணித்தியாலத்துக்கு 65 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளில் காற்று மணித்தியாலத்துக்கு 55 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.