முக்கிய செய்தி
அனுராதபுரம்-பாதெனிய வீதியில் கோர விபத்தில் இரு இளைஞர்கள் பலி
அனுராதபுரம் – பாதெனிய வீதியில் தலாவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று (23) அதிகாலை பேருந்து ஒன்றும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எப்பாவல பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 21 வயதுடைய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியில் நான்கு பேர் பயணித்துள்ளனர்.
இரத்தினபுரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சுற்றுலா செல்வதற்காக பயணித்த பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதியதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்த ஏனைய இருவரும் தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மற்றியனுப்பப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.