உள்நாட்டு செய்தி
பறவை காய்ச்சல் தொடர்பான முக்கிய அறிவிப்பு..!
பறவைக் காய்ச்சல் நோய் தொடர்பில் இலங்கைக்கு இதுவரை எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
“இலங்கை மக்களுக்கு இந்த வகையான நோய் ஆபத்து இல்லை என்பதை நாம் சொல்ல வேண்டும். உலக சுகாதார நிறுவனம் எங்களுக்கு எந்த சிறப்பு எச்சரிக்கையும் வழங்கவில்லை. பறவைக் காய்ச்சல் நிலைமை உலகின் பல்வேறு நாடுகளில் இதற்கு முன்பு பதிவாகிய போதும் அது தீவிரமாக பரவவில்லை. எனவே, இந்த விடயடம் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம்” என்றார்