உள்நாட்டு செய்தி
9 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் ஒருவர் கைது…!
ஐஸ்
போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து 9 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பைச் சேர்ந்த 47 வயதுடையவரே இவ்வாறு கைதாகியுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது