உள்நாட்டு செய்தி
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொடர் போராட்டம்…!
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சத்தியாக்கிரக போராட்டம் 13ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக அவர்கள் தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தங்களை நிரந்தர ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியே அவர்கள் இவ்வாறு தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.