உள்நாட்டு செய்தி
289 கைதிகளுக்கு பொது மன்னிப்பு
அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகள் சிலருக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த 289 கைதிகளுக்கு இன்று (21) விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்தார்.