முக்கிய செய்தி
24 வீடுகள் மெய்நிகர் ஊடாக பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன…!
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டொக்டர் எஸ். ஜெய்சங்கரின் இலங்கை பயணத்தின்போது, இந்திய – இலங்கை உறவுகளில் மூன்று மைல்கற்கள் எட்டப்பட்டன. இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 106 வீடுகளுக்கான நினைவுப் படிகங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் டொக்டர் ஜெய்சங்கர் கூட்டாக மெய்நிகர் ஊடாக திறந்துவைத்தனர். அத்துடன், கொழும்பு, திருகோணமலை ஆகிய நகர்களிலுள்ள மாதிரிக் கிராமத்திலும் 24 வீடுகள் மெய்நிகர் ஊடாக பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.