உள்நாட்டு செய்தி
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களூடாக நாட்டுக்கு ரூபா 11.3 பில்லியன் வருவாய்..!
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக 2023 இல், வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை 02 இலட்சத்து 89 ஆயிரத்து 287 பேர் என்றும் இவர்கள் 5,970 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டுக்கு அனுப்பியுள்ளதாகவும்,
தொழில், வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த அமைச்சை கடந்த வருடத்தில் தாம், பொறுப்பேற்றது முதல் இதுவரை வெளிநாட்டு வேலை வாய்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களிடமிருந்து,
நாட்டுக்கு 11.3 மில்லியன் ரூபா நாட்டுக்கு அந்நியச் செலாவணியாக கிடைத்ததாகவும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஊடாக தென்கொரியா, ஜப்பான், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இலங்கையர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு தனியார் முகவர் நிறுவனத்தின் மூலமும் சவூதி அரேபியா, குவைத், ஜோர்தான்,சிங்கப்பூர், ஜப்பான், ஐக்கிய ராஜ்யம், சைப்பிரஸ், மலேசியா, மாலை தீவு, தென்கொரியா, ருமேனியா, சேர்பியா உள்ளிட்ட நாடுகளுக்கும் இலங்கையர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.இவ்வருடத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பில் ஈடுபட்டுள்ளோர் மூலம் நாட்டுக்கு 5,970 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் கிடைத்துள்ளன.
நாம், கடந்த வருடத்தில் மேற்படி அமைச்சை பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 11.3 மில்லியன் ரூபா நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.சில தரப்பினர் நாட்டுக்கு பணம் அனுப்ப வேண்டாம் என கூறியபோதும், எமது மக்கள் பணம் அனுப்பியுள்ளனர் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.