உள்நாட்டு செய்தி
சேவையிலுள்ள 5000 பதிவு செய்யப்படாத ஆயுர்வேத மருத்துவர்கள்
நாடுமுழுவதும் பதிவு செய்யப்படாத சுமார் 5,000 ஆயுர்வேத வைத்தியர்கள் இருப்பதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதேவேளை நாட்டில் பதிவு செய்யப்பட்ட 19,000 பாரம்பரிய வைத்தியர்களும், 4,500 பதிவு செய்யப்பட்ட பட்டதாரி ஆயுர்வேத வைத்தியர்களும், 3,000 டிப்ளோமா ஆயுர்வேத வைத்தியர்களும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.ஒவ்வொரு வருடமும் ஆயுர்வேத திணைக்களம் மற்றும் ஆயுர்வேத வைத்திய சபைக்கு பதிவு செய்வதற்கு கிட்டத்தட்ட 1,000 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுவதாகவும் பாரம்பரிய வைத்திய முறையை முறைப்படுத்தும் வகையில், உள்ளுர் மருத்துவ அமைச்சு மற்றும் ஆயுர்வேத திணைக்களம் இணைந்து பாரம்பரிய வைத்தியர்களை பதிவு செய்யும் பணியை எதிர்வரும் 30ஆம் திகதி வரை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.