Connect with us

முக்கிய செய்தி

இரண்டு வருடங்களும் வரலாற்றில் பதிவாகும் சட்ட சீர்திருத்தங்கள் -எம். என். ரணசிங்க-

Published

on

இலங்கையில் அதிகளவில் சட்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதியாக கடந்த இரண்டு வருடங்களும் வரலாற்றில் பதிவாகும் என, நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சின் செயலாளர் எம். என். ரணசிங்க ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். இதன்போது, நீதி அமைச்சின் விடயப் பரப்பு தொடர்பாக, 2022 ஆம் ஆண்டு முதல் 59 சட்ட சீர்திருத்தங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதோடு, 07 சட்டமூலங்களும் 44 திருத்தச் சட்டகளும் எதிர்வரும் நாட்களில் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.