உள்நாட்டு செய்தி
2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம்
ஜூலை மாதம் 2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.நாத்தாண்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,கணிதம்,ஆங்கிலம், இரசாயனவியல், பௌதீகம், உயிரியல், சிங்களம், தமிழ் ஊடகம் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் சுமார் 2500 பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.அதேவேளை, மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும்.