முக்கிய செய்தி
“உறுமய” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 20 இலட்சம் காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு….!
நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் காணி உறுதிகளை வழஙகுவதற்கான “உறுமய” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் சற்று முன்னர் நடைபெற்றது. இத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்திற்கு 5000 காணி உறுதிகள் வழங்கப்படவுள்ள நிலையில், அவற்றில் 442 உறுதிகள் தற்போதும் வழங்கப்பட்டுள்ளன.