Connect with us

முக்கிய செய்தி

இலங்கை வருகின்றார் மோடி….!

Published

on

 

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று ஜனாதிபதியின் ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசுமாரசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,

இந்தியப் பிரதமர் விரைவில் இலங்கை வரவுள்ளார். திகதி விவரம் இன்னும் உறுதியாகவில்லை. ஆகஸ்ட் மாதமளவில் வருவார் என எதிர்பார்க்கின்றோம். ஏனைய அயல் நாடுகளைவிடவும் இலங்கை தொடர்பில் இந்தியா கூடுதல் கரிசனையைக் கொண்டுள்ளது.

ஜனாதிபதி ரணிலுக்கு வழங்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பும், மோடியின் அணுகுமுறையும் இதற்குச் சான்றாகும். இலங்கையின் அடுத்த ஜனாதிபதி ரணில்தான் என்பது இந்தியப் பிரதமர் மோடிக்கும் தெரிந்துள்ளது.” – என்றார்.