முக்கிய செய்தி
தொடரும் ரயில் சங்க வேலைநிறுத்த போராட்டம்…!
தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றும் வரையில் பணிப்புறக்கணிப்பை கைவிடமாட்டோம் என ரயில் இயந்திர இயக்குநர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பதவி உயர்வு வழங்காமை, புதிய ஆட்சேர்ப்பில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகோரி தொடருந்து இயந்திர இயக்குநர்கள் சங்கம் கடந்த 6ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது.
5 ரயில்கள் முனையங்களில் 2 முனையங்களைச் சேர்ந்த 80 ரயில் இயந்திர இயக்குநர்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிப்புறக்கணிப்பின் காரணமாக நேற்றைய தினம் 50 ற்கும் மேற்பட்ட ரயில்ப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டன.
எவ்வாறாயினும், பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், நீண்ட தூர ரயில் சேவைகள் மற்றும் இரவு நேர அஞ்சல் ரயில்கள் நேற்று வழமை போன்று இயங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இன்றைய தினம் 65 ரயில் சேவைகள் பயணங்கள் இடம்பெறவுள்ளதுடன், 20 அலுவலக ரயில்சேவைகள் இரத்தாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.