அரசியல்
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வு இன்று
மூன்றாவது முறையாகவும் நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக பதவியேற்க உள்ளார்.பதவியேற்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற உள்ளது. இதன்போது மோடியின் அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது.
இதன் காரணமாக டில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் ட்ரோன் கமராக்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ள விருந்திலும் உலக தலைவர்கள் கலந்துகொள்வார்கள் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.