Connect with us

உலகம்

3வது முறையாக விண்வெளிக்கு பயணித்த சுனிதா வில்லியம்ஸ்!

Published

on

இந்திய வம்சாவளியினரான விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், 3ஆவது முறையாக விண்வெளிக்குப் பயணித்துள்ளார்.நேற்றைய தினம் (06) இரவு 8.22 மணியளவில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.குறித்த விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகிய இருவரும் புறப்பட்டனர்.போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் இன்றையதினம் (06) இரவு 9.45 மணியளவில், சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும் என நாசா தெரிவித்துள்ளது.குறித்த இவரும் சுமார் ஒருவார காலம் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தின் செயற்பாடுகள் தொடர்பில், ஆராய்ச்சியை மேற்கொள்வார்கள் என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது.