முக்கிய செய்தி
புதிய மின்சார சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பு….!
புதிய மின்சார சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ள திருத்தங்களை ஏற்று, குறித்த சட்டமூலத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.ஆளும் கட்சி சமர்ப்பித்துள்ள புதிய மின்சார சட்டமூலமானது முழுவதுமாக அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சபாநாயகர் அண்மையில் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.அதற்கமைய பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு விசேட பெரும்பான்மையுடன் பல சரத்துகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் ஒரு சரத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.எவ்வாறாயினும் உத்தேச புதிய மின்சார சட்டமூலத்திற்கு எதிராக நேற்று பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் சிவில் அமைப்புகளின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.அத்துடன் புதிய மின்சார சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார ஊழியர் சங்கம் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.