Connect with us

முக்கிய செய்தி

அரசியல் நடவடிக்கைகளுக்கான அலுவலகத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி!

Published

on

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது அரசியல் நடவடிக்கைகளுக்கான அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார்.கொழும்பு – ஃப்ளவர் வீதியில் அமைந்துள்ள குறித்த காரியாலயத்தை இன்று காலை அவர் திறந்து வைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக எதிர்வரும் 8ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு பயணமாகவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.