உள்நாட்டு செய்தி
வெளிநாட்டவரின் பயணப்பொதியை திருடியவர் கைது….!
புறக்கோட்டை பஸ் நிலையத்தில் பஸ்ஸில் இங்கிலாந்து பெண் ஒருவரின் பயணப்பொதியை திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.பேலியகொடையை சேர்ந்த 26 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 25 ஆம் திகதி திருடப்பட்ட பயணப்பொதியில் இருந்த மடிக்கணினி, கெமரா உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை சந்தேகநபர் பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன், பையில் இருந்த 20,000 அமெரிக்க டொலர் பணத்தையும் சந்தேகநபர் திருடியுள்ளார்.சந்தேகநபரை புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பொருட்களை கொள்வனவு செய்துள்ள நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.