உள்நாட்டு செய்தி
பேருந்து கட்டணம் தொடர்பில் அறிவிப்பு !
எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும், பேருந்து பயணக் கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.பேருந்து பயணக் கட்டண தேசிய கொள்கைகளுக்கு அமைய, 4 சதவீதமான எரிபொருள் குறைப்புக்கு மாத்திரமே கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள முடியும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.எவ்வாறாயினும், நேற்றைய தினம் டீசல் விலை 2.5 சதவீதமே குறைக்கப்பட்டுள்ளதால், பேருந்து பயணக் கட்டணங்களை குறைக்க முடியாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.