முக்கிய செய்தி
பூஸா சிறைச்சாலையில் STF அதிரடி சோதனை….!
பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.இந்த சோதனை நடவடிக்கையின் போது மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கையடக்க தொலைபேசிகள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் சுமார் இரண்டு மணி நேரம் இந்த சோதனை நடவடிக்கை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.