உள்நாட்டு செய்தி
கம்பஹாவில் பாடசாலை மாணவிகள் மூவர் மாயம்!
கம்பஹா யக்கல பிரதேசத்தில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காகச் சென்ற 14 வயதுடைய மூன்று மாணவிகள் நேற்று முதல் காணாமல் போயுள்ளதாக யக்கல மற்றும் வீரகுல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காணாமல் போன மூன்று மாணவர்களும் கம்பஹா யக்கல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் நண்பர்கள் என தெரிவிக்கப்படுகிறது.இவர்கள் மூவரும் கடந்த புதன்கிழமை இரவு வரை வீட்டிற்கு வரவில்லை என தெரிவித்து பெற்றோர் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.காணாமல் போன மூன்று மாணவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என வீரகுல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும் இது தொடர்பில் சிறுவர் – பெண்கள் பணியகம் மற்றும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.