உள்நாட்டு செய்தி
கொள்வனவு செய்யப்படும் முட்டைகள் குறித்து வெளியான அதிகரிப்பு!
நாடளாவிய ரீதியில் கொள்வனவு செய்யப்படும் முட்டைகளின் எண்ணிக்கை தற்போது ஒரு மில்லியனால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது. இதன்படி கடந்த காலங்களில் 7 மில்லியனாகக் காணப்பட்ட நாளாந்தம் கொள்வனவு செய்யப்படும் முட்டைகளின் எண்ணிக்கை தற்போது 8 மில்லியனைத் தாண்டியுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.தற்போது நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பினாலும் மீன், இறைச்சி போன்றவற்றின் விலைகள் உயர்ந்துள்ளமையினாலும் முட்டைக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.