உள்நாட்டு செய்தி
இலங்கையின் கையிருப்பு 5.5 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பு.!
ஏப்ரல் மாத இறுதிக்குள் இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 5.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக,
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சுமார் 8 வீதத்தால் வலுவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரூபாவின் பெறுமதி உயர்வதென்பது பணவீக்கம் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைச் செலவை குறைக்கவும் வெளிநாட்டு கடனைத் திருப்பிச் செலுத்துவதை எளிதாக்கவும் உதவும்.
இதன்மூலம் உலகளாவிய ரீதியில் இலங்கையின் நிதி வலு மீதான நம்பிக்கை அதிகரிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.