வானிலை
இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதை அடுத்தே, வெள்ள அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.நேற்று (27) பகல் முழுவதும் பெய்த மழையை தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.இதன்படி, இரத்தினபுரி, பெல்மதுல்ல, நிவித்திகல, எலபாத்த, குருவிட்ட மற்றும் கிரியெல்ல பிரதேச செயலக பிரிவுகளுக்கு இந்த மேலும் களுகங்கையின் இரு கரைகளிலும் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.இன்று பிற்பகல் கணிசமான மழைவீழ்ச்சி ஏற்பட்டால் நிலைமை கடுமையாக மாறக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளதுஇது தவிர அத்தனகல்லு குளம் மற்றும் களனி ஆற்றின் நீர் மட்டம் அதிகளவில் காணப்படுவதால், அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.