முக்கிய செய்தி
தேர்தல்களை ஒத்தி வைக்க வேண்டும் -ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர்
எதிர்வரும் தேர்தல்களையும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு மேலும் கருத்து தெரிவித்த பாலித ரங்கே பண்டார,“இப்போது நாம் இந்த திவால்நிலையிலிருந்து விடுபட வேண்டும், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும், IMF மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் எங்களுக்கு ஒப்பந்தங்கள் உள்ளன, இந்த ஒப்பந்தங்களை மீறினால், 2022 இல் நாம் இருந்த இடத்திற்குச் செல்வோம். தெரிந்தே சென்று நம்மை நாமே அழித்துக்கொள்ளலாமா? ஆகவே தேர்தல்களை நடத்தாது நாட்டை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்