வானிலை
இன்றும் பல மாவட்டங்களில் 100 மி.மீ. க்கு மேல் பலத்த மழை
வளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, தென்மேற்கு பருவமழை காரணமாக, தற்போதுள்ள மழை மற்றும் காற்றின் நிலை மேலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இன்று மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் மி.மீ. 100க்கும் மேற்பட்ட கனமழை பெய்யும்.ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.மத்திய மலைநாட்டின் மேற்கு எல்லைகளில் வடக்கு, வடமத்திய, மேல், தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் கி.மீ. (50-60) வரை பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.