உள்நாட்டு செய்தி
காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரிப்பு
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சந்தைகளில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் கணிசமான அளவு குறைவடைந்திருந்த மரக்கறிகளின் விலை தற்போது வேகமாக அதிகரித்து வருவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.அதன்படி, ஒரு கிலோகிராம் போஞ்சி 700 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் கறிமிளகாய் 480 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.அத்துடன் மத்திய மலைநாட்டில் பயிரிடப்படும் ஏனைய மரக்கறிகளின் விலை 350 ரூபாவாக அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.