உள்நாட்டு செய்தி
காட்டு யானைத் தாக்கியதில் வயோதிபர் பலி!
கிராந்துருகோட்டை – பேரியல் சந்தியில் இன்று அதிகாலை காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கான வயோதிபர் ஒருவர் பலியானார்.
குறித்த பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்
உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை மஹியங்கனை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை கிராந்துருகோட்டை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.