உள்நாட்டு செய்தி
வெசாக் வலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறைக் கைதி தப்பியோட்டம் !
வெடிகும்புர பகுதியில் வெசாக் வலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறைக் கைதி ஒருவர் பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தப்பியோடியவர் வெல்லவாய பகுதியைச் சேர்ந்தவர் என மொனராகலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .பதுளை, எம்பிலிப்பிட்டிய, வெல்லவாய மற்றும் சியம்பலாண்டுவ நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்டு மொனராகலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவரே இவ்வாறு தப்பி ஓடியுள்ளார் .