உள்நாட்டு செய்தி
நாடு முழுவதும் நாற்பதாயிரம் போலி வைத்தியர்கள்..!
நாடு முழுவதும் சுமார் நாற்பதாயிரம் போலி வைத்தியர்கள் இருப்பதாக அரச வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாரம்பரிய வைத்தியர்கள் என்ற போர்வையில் சிலர் நீரிழிவு போன்ற நோய்களுக்கு ஆங்கில மருந்து வகைகளை வழங்குவதாக வைத்திய சங்கம் கூறியுள்ளது.
விஷேட வைத்தியர்கள் பலர் வெளிநாடு சென்றுவிட்டதாக கூறப்படும் நிலையில் போலி வைத்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.