உள்நாட்டு செய்தி
7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…!
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இன்று ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் பாதுக்க, சீதாவக பிரதேச செயலகப் பிரிவுகள் (டி.எஸ்.டி) மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட, வலல்லாவிட்ட, அகலவத்தை, பாலிந்தநுவர, ஹொரண, இங்கிரிய, புலத்சிங்கள மற்றும் மத்துகம மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையுடன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கண்டி மாவட்டத்தின் உடபளாத்த, உடுநுவர, கங்க இஹல கோரளை, யட்டிநுவர, உடுதும்பர, பஸ்பகே கோரள, மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க, கேகாலை, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, தெரணியகல, யட்டியந்தோட்டை, புளத்கொஹுபிடிய, வரகாபொல, மாவனெல்ல மற்றும் கலிகமுவ மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்கள், கொத்மலை, அம்பகமுவ மற்றும் நுவரெலிய பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல, பெல்மடுல்ல, ஓபநாயக்க, கஹவத்த, கிரியெல்ல, இரத்தினபுரி, அயகம, கலவான, எஹலியகொட, குருவிட்ட, பலாங்கொட, எலபாத, இம்புல்பேமற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.