உள்நாட்டு செய்தி
சீரற்ற காலநிலையால் டெங்கு பரவும் அபாயம் !
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.நாட்டில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 24,227 டெங்கு நேயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிக்கையின்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் 2,234 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்ததுடன், இந்த மாதத்தின் இதுரையான காலப்பகுதியில் 1,954 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.குறித்த மாவட்டத்தில் 5,183 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.கொழும்பு மாவட்டத்துக்கு அடுத்தபடியாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3,884 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.