உள்நாட்டு செய்தி
யாழில் உணவு வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி !
யாழ்ப்பாணத்திலுள்ள கடையொன்றில் நபரொருவர் வாங்கிய ரோல்ஸில் துருப்பிடித்த கம்பித் துண்டொன்று காணப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு அறிவித்து சட்ட நடவடிக்கையை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதேவேளை, கடந்த 21ஆம் திகதி குறித்த பகுதியில் உள்ள கடையொன்றில் வாங்கிய பாணுக்குள் பீங்கானின் கண்ணாடித் துண்டொன்று காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றமையால் கடைகளில் உணவுகளைக் கொள்வனவு செய்வதில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.