உள்நாட்டு செய்தி
ஜப்பானில் இலங்கை மாணவர்கள் இருவர் கைது….!
ஜப்பானில் சட்டவிரோத கருக்கலைப்பு செய்த குற்றச்சாட்டில் 2 இலங்கை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கருக்கலைப்பு செய்த குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவரும் அவரது காதலனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன், கருக்கலைப்பிற்கு உதவிய குற்றச்சாட்டில் மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜப்பானின் இபராக்கி மாகாண பொலிஸார் அறிவித்துள்ளனர்.கருக்கலைப்பிற்காக மருந்து ஒன்றைப் பயன்படுத்தியதனை இருவரும் விசாரணையின்போது ஒப்புக்கொண்டதாக அந்த நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.முன்னதாக மருத்துவமனை ஒன்றில் கருக்கலைப்பை மேற்கொள்ளும்படி அவர்கள் கோரியதாகவும், ஜப்பானிய சட்டத்திற்கு அமைய அதற்கு மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.இந்த நிலையில் சர்வதேச மாணவர்கள் ஜப்பானில் குடியுரிமை பெறுவதில் பாதகமான நிலைமை ஏற்படலாம் என சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்