உள்நாட்டு செய்தி
காட்டு யானையை சுட்டுக்கொன்ற நபர் கைது!
டோகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்மில்லகுளம் பகுதியில் காட்டு யானையை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாதாக்க வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.இலக்கம் 538, பழையகுளம், ஹல்மில்லக்குளம், தருவில என்ற இடத்தில் வசிக்கும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (23) அதிகாலை 1.30 மணியளவில் காட்டு யானைக் கூட்டம் குறித்த நபரின் பயிர்களை நாசம் செய்துள்ளதாக திணைக்களப் பிரிவு தெரிவித்துள்ளது.சந்தேக நபர் தனது கையிலிருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் காட்டு யானையை சுட்டுக் கொன்றுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.7அடி, 3 அங்குலம் உயரம் கொண்ட 20 வயதுடைய ஆண் யானையே துப்பாக்கிச் சூட்டுக் இலக்காகி உயிரிழந்துள்ளது.சந்தேக நபரை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் குறித்ததா நபரை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.