வானிலை
சீரற்ற காலநிலையால் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரையில் 8 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சேர்ந்த 33 ஆயிரத்து 960 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.கடும் காற்று மற்றும் மரம் முறிந்து வீழ்ந்த சம்பவங்களால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கைக்கு அமைய மேல் மாகாணத்திலேயே அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளன.இதன்படி மேல் மாகாணத்தில் 4,814 குடும்பங்களைச் சேர்ந்த 19,527 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.அத்தோடு கொழும்பு – பதுளை பிரதான வீதியில் ஹப்புத்தளைக்கும் தியத்தலாவைக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று நான்கு இடங்களில் பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளது. இதனால் வீதி முற்றாக தடைப்பட்டுள்ளதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்த வீதியை பயன்படுத்துவோருக்கு மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் தியத்தலாவ பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் சாகர தயாரத்ன தெரிவித்தார். மேலும் தியத்தலாவ இராணுவம், தியத்தலாவ பொலிஸார், ஹப்புத்தளை விசேட அதிரடிப்படை, ஹப்புத்தளை பிரதேச சபை, ஹப்புத்தளை பிரதேச செயலகம் என்பன இணைந்து இந்த வீதியில் வீழ்ந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.