வானிலை
வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
நாடு முழுவதும் தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால் மணித்தியாலத்துக்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (24) காலை 10:30 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை நாளை (25) காலை 10:30 மணி வரை நடைமுறையில் காணப்படும் என திணைக்களம் கூறியுள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று நிலை காரணமாக நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விளைவாக, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் அளவில் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாம் என கூறப்பட்டுள்ளது.