உள்நாட்டு செய்தி
மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

கற்பிட்டி முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற் பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படும். இதனால் கடற்றொழிலாளர்கள் மறு அறிவித்தல் வரை குறித்த கடற்பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி களனி கங்கை, களு கங்கை, கிங் கங்கை மற்றும் நில்வளா கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த ஆறுகளை அண்டியுள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் சில பகுதிகளில் வெள்ளப் பெருக்கு சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.