உள்நாட்டு செய்தி
மின் விநியோகத் தடை!
சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 3 நாட்களில் 36,900 மின்சார செயலிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோருக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. மின்சார செயலிழப்புகள் மற்றும்மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டு வருவதற்காக மேலதிக பணியாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.