உள்நாட்டு செய்தி
பொரளையில் பாரிய மரம் முறிந்து வீழ்ந்தது: போக்குவரத்து பாதிப்பு
கொழும்பு, பொரளை பகுதியில் வீதியோரத்தில் இருந்த 200 வருட பழமையான மரமொன்று வீழ்ந்ததில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொரளை மயானத்திற்கு அருகில் இருந்த மரமொன்றே இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை இவ்வாறு வீழ்ந்துள்ளது.
மரம் வீழ்ந்துள்ள நிலையில் பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன. இந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் கொழும்பு மாநகர சபை ஈடுப்பட்டுள்ளது.