உள்நாட்டு செய்தி
ஈரான் ஜனாதிபதியின் மரணம் தொடர்பில் சந்தேகம் ஈரான் பாதுகாப்பு பிரிவு தீவிர விசாரணை..!
ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி பயணித்த பெல் 212 ரக ஹெலிகாப்டர் தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும்,
இதன் காரணமாக விபத்து தொடர்பில் ஈரான் பாதுகாப்பு படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏவுகணைத் தாக்குதலால் ஹெலிகாப்டர் முற்றாக எரித்து அழிக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இஸ்ரேலின் பலஸ்தீன் ஆக்கிரமிப்பிற்கு எதிராக தற்போது தாக்குதலில் ஈடுபடும் ஹூதி படைக்கு ஆதரவு வழங்கியமை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியமை உள்ளிட்டவை காரணமாக,
மேற்குலகின் விமர்சனத்திற்கு உள்ளான ஈரான் ஜனாதிபதிக்கு கடும் உயிர் அச்சுறுத்தல் இருந்தமை யாவரும் அறிந்ததே.